அன்னைத் தமிழ்க் கல்விக்கழகம்
ஆண்டுவிழா அழைப்பிதழ்
Website Updated On : 01/03 - Annual Day 2026 page has been added.
ஆண்டுவிழா அழைப்பிதழ்
Important Date :
Annual Day : Mar 22, 2026
Annai Tamil Academy - School Annual Day 2026 - Invitation
வணக்கம்!!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!
புதிய ஆண்டை வரவேற்கும் இந்த நேரத்தில், வரவிருக்கும் அன்னைத் தமிழ்க் கல்விக்கழகத்தின் ஆண்டு விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம், இந்த முன் அறிவிப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
இவ்விழாவில் மாணவர்களுக்காக மாறுவேடம், இசை, நாடகங்கள், நடன நிகழ்ச்சிகள், அகப்பெல்லா, மற்றும் பல சிறப்பான நிகழ்ச்சிகளைத் நமது ஆசிரியர்கள் தயாரித்து வருகின்றனர்.
இது நமது மாணவர்கள் மேடையில் தன்னம்பிக்கை வளர்த்துக்கொள்ள, தங்கள் திறமைகளை பெருமையுடன் வெளிப்படுத்த, ஒரு சிறந்த வாய்ப்பு. நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கான பதிவு (Registration Form) அடுத்த 2 வாரங்களில் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
தேதி: ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 22, 2026
நேரம்: காலை 11:00 – மாலை 4:00 CST
இடம்: Benedictine University, 5700 College Road, Lisle, IL - 60532
நுழைவு: அனைவருக்கும் இலவசம் (முன்னாள் ATA குடும்பங்கள் உட்பட).
மதிய உணவு: அனைத்து வருகையாளர்களுக்கும் இலவசம்.
பங்கேற்பு: வகுப்பு ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ள நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்க ஊக்குவிக்கவும்.
விழாவின் வெற்றி நமது அனைவரின் கூட்டு முயற்சியில்தான் உள்ளது. எனவே, பெற்றோர்கள் நமது ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றி, நிகழ்ச்சியை முன்னெடுத்து செல்ல உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
உங்களுக்கு நிகழ்ச்சி நடத்தும் அனுபவமோ, தகவல்கள் இருந்தால், ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். விருப்பமுள்ளவர்கள் Annual Day Volunteer Form இணைப்பில் பதிவு செய்து கொண்டு, ஆசிரியர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளை முன்னெடுக்கவும்.
உங்கள் ஆதரவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.
நிகழ்ச்சிகளை விவரங்கள் மின்னஞ்சலில் அடுத்த 2 வாரங்களில் அனுப்பப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் அறிய ஆசிரியை நித்யா (336-918-4378) அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
Annai Tamil Academy - IL
Program Committee
நிகழ்ச்சி விவரங்கள்
விரைவில் பகிரப்படும்